• September 19, 2024

தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.!

Tomato price has gone up again!

5 நாள்களுக்கு பிறகு மொத்த சந்தையில் தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.

சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி இன்றியமையாதது. தமிழ்நாட்டின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.இந்நிலையில் தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு கிலோ சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெளிச்சந்தையில் ரூ.100 முதல் 150 வரை (சில்லரை விலை) விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி (மொத்த விற்பனை) ரூ.100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் தர தக்காளி எனப்படும் நவீன் தக்காளி நேற்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 நாள்களுக்கு பிறகு இன்று 20 ரூபாய் அதிகரித்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Previous

பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம். – மு.க.ஸ்டாலின் 

Read Next

‘தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட INDIA இருக்கு’ – பிரதமர் மோடி பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular