தீபாவளி ரயில்கள்- நவ.10ந் தேதிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென் மாவட்ட ரயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் , உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மீதமுள்ள ஒரு சில ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் 200ஐ கடந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி .அதிகாலை 3 மணி முதல் கவுன்ட்டரில் டிக்கெட் பெற வரிசையில் நின்றவர்கள் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம்.