• September 19, 2024

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் “கேப்டன் மில்லர்”ஃபர்ஸ்ட் லுக்!

"Captain Miller" First Look will be released today at 5 PM!

’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Read Previous

தக்காளி குறைக்க நடவடிக்கை. – அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.!

Read Next

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular