விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இப்பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.