• September 19, 2024

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

233 people have officially died in this train accident

பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பதை அறிய ரயில்வே முயற்சித்து வருகிறது.

இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது . காயமடைந்தோரின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.ஒடிசா மாநில மீட்புப்படை, தேசிய மீட்பு மற்றும் நிவாரணப்படைகள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார். மேலும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்; படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் .

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு .

044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள்

94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்

Read Previous

பள்ளிகள் திறப்பு! – சிறப்பு பேருந்துகள் இயக்கம் .

Read Next

தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular