தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகிலும் முக்கியமான இசையமைப்பாளராக திகழ்த்துவரும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ரசிகர்களும் , சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.அந்த வகையில் அவரின் நீண்டகால நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் . அதேசமயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இளையராஜாவின் அலுவலகத்திற்கே சென்று அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.