மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் அவரது கடைசி படமான மாமன்னன் வருகின்ற ஜூன் மாதம் வெளியாவதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது . இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் . இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது . இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . பாஹத் பாசில் , கீர்த்திசுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.