Prabhas’s Adipurush trailer released!
வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வந்தப் படம் ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தில் ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சிஜி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று ஹைதாராபாத் நகரில் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்பட்ட இந்தப்படம், கொரோனா ஊரடங்கு மற்றும் சிஜி பணிகள் காரணமாக 700 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது