• September 20, 2024

விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

Vishal - SJ Surya's Mark Antony Teaser has impressed the fans!

Vishal – SJ Surya’s Mark Antony Teaser has impressed the fans!

விஷால்  ‘லத்தி’  படத்தைத் தொடர்ந்து விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்.படத்தின் டீஸரை, நடிகர் விஜயிடம் காண்பிக்க விரும்பிய மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படக் குழுவினர், அதற்காக அவரிடம் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டுள்ளனர். நடிகர் விஜய்யும் மறுப்பேதும் தெரிவிக்காமல், உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து நடிகர் விஷால் உட்பட படக்குழுவினர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள். மேலும் நடிகர் விஷால், விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.

இந்நிலையில், மார்க் ஆண்டனி இத்திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை 06:30 மணிக்கு வெளியானது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Read Previous

ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க… மனைவியிடம் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

Read Next

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு ஆட்சியர் அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular