• September 19, 2024

45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றினார் சிரஞ்சீவி’ – நடிகர் பொன்னம்பலம் !

Chiranjeevi saved my life by spending 45 lakhs’ – Actor Ponnambalam!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பொன்னம்பலம்.சில வாரங்களுக்கு முன்னதாக பொன்னம்பலத்திற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்து போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து திரும்பி உள்ளார். இது குறித்து அவர் கொடுத்த நேர்காணலில் உடல்நிலை சரியில்லாதது குறித்து நடிகர் சிஞ்சீவியிடம் சொன்னேன். அவர் ஐதராபாத் வரமுடியுமா என்று கேட்டார். நான் குடும்பம் இங்கே இருப்பதை தெரிவித்தேன். அதற்கு அவர் ஒன்றும் கவலைப்படாதீங்க. அப்போலோ போங்க. எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார். டயாலிசிஸ் செய்வதற்கு உதவி செய்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ரூ. 45 லட்சம் வரை செலவு செய்து என்னை காப்பாற்றினார். அப்போலோவில் எனக்கு என்ட்ரி ஃபீஸ் கூட வாங்கவில்லை என்று கூறியுள்ளார்

Read Previous

சர்வதேச புக்கர் பட்டியலில் ‘பூக்குழி’

Read Next

புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular