• September 19, 2024

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

aavin strike

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

ஆவின் நிா்வாகம் பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து, கடந்த 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.அதில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், சனிக்கிழமை முதல் (மாா்ச் 11) ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்பாமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, பால் உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கங்களின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி இன்று பால் நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு வரக்கூடிய பால் வரத்து குறைந்தது.பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது

Read Previous

“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

Read Next

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular