• September 20, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது !

10th class pUBLIC exam results published!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில்  10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%  .தேர்வு முடிவுகளை மாணவர்கள்  www.tnresults.nic.in,   www.dge.tn.nic.in  ,  www.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம். இதுபோலவே, பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

Read Previous

மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்” டீஸர் வெளியானது.

Read Next

தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விகிதம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular