• September 19, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இந்தியா
டெல்லி மாநகரில் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததில் 2 பேர் பலி, 8 பேர் காயம்.

டெல்லி மாநகரில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் 2 பேர் பலி, 8 பேர் காயம்.

டெல்லி மலை மந்திர் பகுதியில் புதன்கிழமை வேகமாக வந்த வாகனம் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் முன்னா மற்றும் சமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.வாகனத்தை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது

சினிமா
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் ட்ரைலர் வெளியானது !

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் ட்ரைலர் வெளியானது !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. https://youtu.be/GYeSfq_bj_M

தமிழ்நாடு
திருமங்கல வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி!

திருமங்கல வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி!

மதுரை மாவட்டம் திருமங்கல வட்டார வளமையத்தில் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது.இந்தப்போட்டியில் திருமங்கல ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்குட்பட்டு கலந்து கொண்டனர் .இந்தப்போட்டிற்கு நடுவராக  விடத்தக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.T.கணேசன் மற்றும் K.மீனாட்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி .K.சிவபாலா மற்றம்

சினிமா
வெற்றிமாறன் படத்தில் ஜுனியர் என்டிஆர்?

வெற்றிமாறன் படத்தில் ஜுனியர் என்டிஆர்?

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் பாகம் வருகிற மார்ச் 30

தமிழ்நாடு
சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 200 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எத்தகைய இழிநிலை இருந்தது

சினிமா
விஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்! – எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்! – எஸ்.ஏ.சந்திரசேகர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு, நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தார். இந்த தகவல், ஆரணி முழுவதும் பரவியதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு வெளியேவந்த எஸ்.ஏ.சியிடம்,

இந்தியா
மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமிக்கு எச்.ஐ.வி !

மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமிக்கு எச்.ஐ.வி !

மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமி ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஈட்டா மாவட்டத்தில் ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் கடந்த

சினிமா
100 கோடி வசூல் சாதனை படைத்த வாத்தி!

100 கோடி வசூல் சாதனை படைத்த வாத்தி!

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளிவந்த வாத்தி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாத்தி படமும் வெற்றி பெற்றிருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில்

சினிமா
விடுதலை பாடல் & டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

விடுதலை பாடல் & டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி உடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும்

தமிழ்நாடு
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் ! பீகார் மாநில பிரதிநிதிகள் குழு தமிழ்நாட்டிற்கு வருகை !

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் ! பீகார் மாநில பிரதிநிதிகள் குழு தமிழ்நாட்டிற்கு வருகை !

தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து