தொழில்நுட்பம் செய்திகள்

madurai 1 week ago Technews

Flipkart சலுகை: வெறும் ரூ. 5000-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung Smart TVFlipkart இல் ஒரு புதிய விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. நீங்கள் தீபாவளி விற்பனையின் பயனைப் பெற தவறியிருந்தால், இந்த சேலில் டிவியை மிக மலிவாக வாங்கலாம். ஃபிளிப்கார்ட் 55 இன்ச், 43 இன்ச் மற்றும் 32 இன்ச் டிவிகளில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் இந்த விற்பனையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. சாம்சங்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தால், நீங்கள் டிவியை ரூ.5,240க்கு வாங்கலாம். சாம்சங்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.19,900 ஆகும். ஆனால் ஸ்மார்ட் டிவி இந்த விற்பனையில் ரூ.17,490க்கு கிடைக்கிறது. அதாவது இந்த டிவிக்கு 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் அதை இன்னும் மலிவான விலையிலும் வாங்கலாம். வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இந்த தள்ளுபடிகளை எப்படி பெறுவது என இந்த பதிவில் காணலாம். ஐசிஐசிஐ (ICICI) கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி இந்த டிவியை வாங்கினால், உடனடியாக ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். அதாவது இந்த தள்ளுபடிக்குப் பிறகு டிவியின் விலை ரூ.16,240 ஆகும். இதற்குப் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதையும் பயன்படுத்திக்கொண்டால், டிவியின் விலை கணிசமாகக் குறையும். சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவியை பரிமாற்றிக் கொண்டால், நல்ல தள்ளுபடி பெறலாம். எனினும், நீங்கள் பரிமாற்றிக்கொள்ளும் உங்கள் பழைய டிவி, நல்ல நிலையிலும், சமீபத்திய மாடலாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பரிமாற்ற சலுகையில் நல்ல தள்ளுபடி கிடைக்கும். இந்த அனைத்து தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களால் பெற முடிந்தால், இந்த சூப்பரான ஸ்மார்ட் டிவியை ரூ.5,240க்கு வாங்கலாம்

updated in 24/11/2021 03:48:44 PM