விளையாட்டு செய்திகள்

madurai 1 week ago Indianews

ஐபிஎல் 2022: சென்னை டெல்லி, மும்மை, கொல்கத்தா தக்க வைத்து கொண்ட வீரர்கள்ஐபிஎல் 2022 அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடைசி இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஆக்சனும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஓவ்வொரு அணியும் யாரை தக்க வைத்து கொள்ளபோகிறார்கள் யாரை வெளியில் அனுப்ப போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி உள்ளது. ஒவ்வொரு அணி ரசிகர்களும் இந்த வீரரை வெளியில் விட வேண்டாம் என்று இப்போதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை, டெல்லி, மும்மை, கொல்கத்தா அணிகள் எந்த எந்த வீரரை தக்க வைத்து கொள்ளப்போகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்-ல் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கபடுகிறது. சமீபத்தில் என்னுடைய கடைசி போட்டி சென்னையில்தான் என்று தெரிவித்து இருந்தார். சென்னை அணி தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மெயின் அலி அல்லது சாம் கர்ரனை அணியில் தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி அணியில் பந்த், அக்சர் படேல், பிரிதிவ் ஷா மற்றும் நார்ட்ஜே ஆகியோரை தக்க வைத்து கொள்ள உள்ளது. ஷ்ரேயஸ் அய்யர் புதிய இரண்டு அணிகளில் ஒரு அணியின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மும்மை அணியில் ரோஹித், பும்ரா, பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷானை அணியில் தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களை ஏலத்தில் மறுபடியும் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் நரைன், ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் அல்லது சுப்மன் கில் ஆகியோரை தக்க வைத்து கொள்ள திட்டம் போட்டுள்ளது. மற்ற அணிகள் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

updated in 25/11/2021 06:21:47 PM