லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படத்தின் 2வது சிங்கிளான ‘Badass’ பாடல் வெளியானது.