இந்திய செய்திகள்

madurai 1 week ago Indianews

ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு


srilankanews

கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரயில் பயணிகளை விட அவர்களை வழியனுப்ப வருவோர் மற்றும் பொழுதுபோக்க வருவோரின் கூட்டங்கள் அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டத்தால் கொரோனா அதிகம் பரவும் அபாயம் இருந்ததால், சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.50 என கடந்த மார்ச் மாதம் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து பல ரயில்வே நிலையங்களிலும் இந்த கட்டண முறை உடனடியாக அமல்படுத்தப்பட்டது . இந்த கட்டண உயர்வால் ரயில் நிலைய மேடைகளில் பயணம் செய்வோரை தவிர்த்து மற்ற மக்கள் கூட்டம் காணப்படவில்லை. இக்கட்டான காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த கட்டண உயர்வு பலதரப்பினருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது . ஒருவழியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைய நடைமேடைகளில் கொரோனா காலங்களில் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.50 கட்டணமானது குறைக்கப்பட்டு தற்போது கட்டணம் ரூ.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு மக்களிடையே திருப்தியை அளித்து இருக்கிறது.

updated in 25/11/2021 06:19:33 PM