இந்திய செய்திகள்

madurai 1 week ago Indianews

இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


srilankanews

தெற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில நீடிக்கின்றது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை. இதன் காரணமாக எந்த மாவட்டங்களில் எந்த அளவு மழை பெய்யும் என காணலாம்: 25.11.2021: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுசேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 26.11.2021: கன்யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 27.11.2021: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 28.11.2021: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 29.11.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 8, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 5, பண்ருட்டி (கடலூர்), திருவாரூர் (திருவாரூர்) தலா 4, பள்ளிக்கரணை (சென்னை), தலைஞாயர் (நாகப்பட்டினம்), பாம்பன் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), வானமாதேவி (கடலூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), மதுக்கூர் (தஞ்சாவூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 3, சிதம்பரம் (கடலூர்), நாகப்பட்டினம், மன்னார்குடி (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), அரியலூர், மணல்மேடு (மயிலாடுதுறை), நீடாமங்கலம் (திருவாரூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), தரமணி (சென்னை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கடலூர் (கடலூர்), ராமநாதபுரம், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), சிவகங்கை, பாண்டவையார் முகப்பு (திருவாரூர்) தலா 2. 25.11.2021,26.11.2021: குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 27.11.2021: குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 29.11.2021: தெற்கு அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள்இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

updated in 25/11/2021 01:19:17 PM