மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் லஞ்ச புகார்!

Actor Vishal filed a bribery complaint against the Mumbai Censor Board!

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் கடந்த 15ம் தேதி தமிழில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது. சுமார் ரூ.60 கோடி வசூலினை இப்படம் ஈட்டியதை தொடர்ந்து, ஹிந்தியில் இன்று(செப்.,28)வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளை மேற்கொள்ள மும்பை சென்சார் போர்டினை சேர்ந்த அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டு பெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் நடிகர் விஷால் அண்மையில் ஓர் வீடியோ பதிவினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஹிந்தி பதிப்பில் ‘மார்க் ஆண்டனி’ படத்தினை திரையிட ரூ.3 லட்சம் மற்றும் அதற்கான சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என மொத்தம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் வாங்கக்கப்பட்டதாக விஷால் புகாரில் தெரிவித்துள்ளார்.

Read Previous

வெளியானது லியோ படத்தின் 2வது பாடல் ‘Badass’

Read Next

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular