
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை யொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் பசும்பொன் கிராமம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.