
இது விசேஷ காலம் என்பதால் ஆன்லைன் தளங்கள் முதல் சில்லறை வணிக நிறுவனங்கள் வரை அனைவருமே பல சலுகைகளை அறிவிப்பார்கள். மக்களும் விலை குறைவாக கிடைக்குதே எனப் பல பொருட்களை இந்த சமயத்தில் ஷாப்பிங் செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டுமே சில பொருட்கள் டிரெண்டிங்காக இருக்கும். இந்த ஆண்டு ஆன்லைன் ஷாப்பிங்கில் எது டிரெண்டிங்காக இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல இ-காமர்ஸ் தளங்கள் பலவித தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. தள்ளுபடி என்று சொன்னாலே மக்கள் மனதில் ஒரு சந்தோஷம் கொப்பளிக்கும். ஏனென்றால் நமக்கு பிடித்தமான உடைகளை, பொருட்களை குறைந்த விலையில் வங்கலாம், தீபாவளி முடிந்த்தும் கிறிஸ்துமஸ் வேறு வருகிறது. ஆகையால் இந்த சலுகையை சரியாக பயன்படுத்தி உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்.
ஷாப்பிங் செய்வதற்கு பலரும் மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். இதில் சில நொடிகளில் தங்கள் விரல் நுனியில் நாம் ஆசைப்பட்ட பொருட்களை வாங்க முடிகிறது. இனிப்புகள் முதல் டிரெண்டிங்கான ஆடைகள் வரை ஆன்லைன் தளங்களில் கிடைக்காத பொருட்களே இல்லை. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளையும் அறிவித்துள்ளன மொபைல் ஷாப்பிங் தளங்கள். இதைப் பயன்படுத்தி பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்.